நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் விசேட சோதனை நடவடிக்கையின் கீழ், இன்று அதிகாலை 12.30 உடன் நிறைவடைந்த கடந்த 24 மணித்தியாலங்களில் 785 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களில் போதைப்பொருள் குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய 596 சந்தேகநபர்களும், குற்றப்புலனாய்வு பிரிவினால் அனுப்பப்பட்ட பட்டியலில் உள்ள 189 பேரும் அடங்குவதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
குற்றச் செயல்களுக்காகத் தேடப்படும் 05 சந்தேகநபர்களும் இதன்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 128 கிராம் ஹெரோயின், 115 கிராம் ஜஸ் பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன.