(அஷ்ரப் ஏ சமத்)
கொழும்பு டி.எஸ்,சேனாநாயக்க கல்லுாரியின் 43வது வருடாந்த இஸ்லாமிய தின நிகழ்வுகள் கல்லுாாியின் ஆர்.ரீ. அலஸ் மண்டபத்தில் முஸ்லிம் மஜ்ஜிலிஸ் தலைவர் அப்துல் ரசீட் றிபான் தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கல்லுாாியின் அதிபர் சம்பந் வீரகொட, கௌரவ அதிதியாக டொக்டர் ஜ.வை.எம் ஹனீப் பிரதான பேச்சாளராக அஷ்ஷேக் அக்ரம் நுார் செயலாளர் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா, மற்றும் பிரதி அதிபர்கள், ஆசிரியர்கள் முன்னாள் ஆசிரியர்கள், பெற்றோர்கள் ஏனைய பாடசாலைகளிலிருந்து போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளும் கலந்து சிறப்பித்தனர்.
போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும் பாடசாலைக்கு வெளிப் பாடசாலை மாணவர்களுக்கிடையே நடாத்திய போட்டி நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும் அதிதிகளில் சான்றிதழ்களும் பதக்கங்களும் வழங்கி வைக்கப்பட்டன. அத்துடன் மாணவர்களது இஸ்லாமிய நிகழ்வுகளும் மேடையேற்றப்பட்டன.
இங்கு உரையாற்றிய கல்லுாாி அதிபர் சம்பத் வீரகொட….
.கொழும்பு டி.எஸ் . சேனாநாயக்காவில் மும்மொழிகளிலும் முஸ்லிம் மாணவர்கள் பரவலாக கற்கின்றனர்.இங்கு நான்கு இனங்களையும் சேர்ந்த மாணவர்கள் கல்வி கற்கின்றனர் இங்கு பௌத்த சங்கம் முஸ்லிம் மஜ்லிஸ, ஹிந்து மன்றம், கிரிஸ்த்துவ மன்றம் என்ற அமைப்புக்கள் பாடசாலை ஆரம்பித்த காலத்திலிருந்து இருந்து வருகின்றன. அவரவர்களுக்கான மத அநுஸ்டானத்திற்கான நிலையங்களும் இப் பாடசாலையில் வசதி செய்யப்பட்டுள்ளது..
இக் கல்லுாாியில் கற்கும் மாணவர்கள் ஒர் இன ஜக்கியத்தின் கீழ் ஏனைய சமுகத்தின் கலை, மதம் கலாச்சார விழுமியங்களை பாடசாலை மட்டத்திலேயே கற்கின்றனர் ஏனைய பாடசாலைகளான கொழும்பு நாலாந்தா, ஆனந்தாக் கல்லுாாிகள் 99 வீதம் பௌத்த மாணவர்களை மட்டும் கொண்டுள்ள பாடசாலையாகும் அம் மாணவர்கள் தனியே ஒர் பௌத்த மத்தின் சூழலில் வாழ்கின்றனர் அவர்கள் இந் நாட்டில் இருந்து வேறு பிரதேசங்கள் நாடுகள் சென்ற பின்னர் அவர்கள் ஏனைய சமூகத்தின் மத கலை,கலா்ச்சாரங்களை அறியாத மாணவர்களாக உள்ளனர். ஆகவேதான் இலங்கை பௌத்த நாடாக இருந்தாலும் நாம் இந்த நாட்டில் வாழும் ஏனைய சமுகங்களது கலை,கலாச்சார மத விடயங்களை அறிந்து தெரிந்து தேசிய ஜக்கியமாக வாழ்வதே ஒர சிறந்த நற்பிரஜையாக நாம் வாழலாம் எனத் கல்லுாாி அதிபர் அங்கு தெரிவித்தார்