பொதுஜன ஐக்கிய முன்னணியின் யாப்பில் புதிய திருத்தங்கள் உள்வாங்கப்பட்டு 06.02.2024 நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்ரிபால சிறிசேன தலைமையில் 06.02.2024 இடம்பெற்ற கூட்டத்தில் இந்த செயற்பாடு இடம்பெற்றுள்ளது.
டார்லி வீதியில் உள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற இந்த கூட்டத்தில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் பொதுஜன ஐக்கிய முன்னணி என்பவற்றின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றிருந்தனர்.
இதேவேளை, எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் வேட்பாளர் ஒருவர் போட்டியிடுவார் என அதன் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் பொலன்னறுவை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வில் தெரிவித்துள்ளார்.