ஐ. ஏ. காதிர் கான்
ஐக்கிய மக்கள் சக்தியின் உப தலைவர் சரத் பொன்சேகாவின் தலைமையில் “கட்சி சார்பற்ற மக்கள் சக்தி” (Non-Party People’s Force) என்ற புதிய கட்சி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அக்கட்சியின் உத்தியோகபூர்வ முகநூல் பக்கம், ஜனவரி மூன்றாம் திகதி உருவாக்கப்பட்டது.
அண்மையில், முன்னாள் இராணுவத் தளபதி தயா ரத்நாயக்க (SJB) “ஐக்கிய மக்கள் சக்தி” கட்சியில் இணைந்தமைக்கு, பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா கடும் எதிர்ப்பை வெளியிட்டிருந்தார்.
இதனால், கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கும் சரத் பொன்சேகாவுக்கும் இடையில் சர்ச்சைக்குரிய சூழல் உருவானது.
தயா ரத்நாயக்கவை (SJB) கட்சியில் இணைத்துக் கொண்டதுபோல், இதன்பிறகு கோட்டாபய ராஜபக்ஷவையும் (SJB) கட்சியில் சேர்த்துக்கொள்ள முடியும் என, சரத் பொன்சேகா பகிரங்கமாகவே ஊடக சந்திப்பொன்றில் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.