பிர்தௌசியா அஷ்ரப்
கொழும்பு
அமெரிக்காவின் ஒக்லஹோமா மகாணத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் குறித்த நிலநடுக்கமானது ஒக்லஹோமா மாகாணம், ப்ராக் நகருக்கு 8 கிலோ மீட்டர் வடமேற்கே நேற்று (04.02.2024) பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
3 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் கூறியுள்ளது.
மேலும் இந்த நிலநடுக்கம் பிராந்தியம் முழுவதும் உணரப்பட்ட நிலையில் உயிரிழப்போ, பொருள் இழப்போ ஏற்பட்டதாக உடனடி தகவல் இல்லை என தெரிவிக்கப்படுகின்றது.