இஸ்மதுல் றஹுமான்
சுதந்திரம் மட்டுப்படுத்தப் பட்டுள்ளதால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாம் இன்று வீதியில் இறங்கியுள்ளோம் என காணாமற்போனாரின் குடும்ப ஒன்றிய ஏற்பாட்டாளரும் நீர்கொழும்பு மக்கள் பேரவை உறுப்பினருமான பிரிட்டோ பெர்ணாண்டோ நீர்கொழும்பு மக்கள் பேரவையினால் நீர்கொழும்பு தெல்வத்த சக்தியில் நடாத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில் கூறினார்.
"அவர்களை விரட்டுவோம் சுதந்திரமடைவோம்" எனும் தொனிப் பொருளில் சுதந்திர திணத்தன்று நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் பிரிட்டோ பெர்ணாண்டோ தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில் இலங்கையில் எந்த அரசாங்கமும் எப்போதும் செய்வது போல் இராணுவத்தைக் கொண்டு சுதந்திர திணத்தை அனுஷ்டிக்கிறது.
இன்று வீதிக்கு வந்திருப்பது உண்மையான சுதந்திரம் இருக்கிறதா? என்ற கேள்விக்கு மத்தியிலேயே. வாழ்வது என்பதே இன்று பிரச்சிணைக்குறியது.
மின் கட்டணம், நீர் கட்டணம் முதல் சகலதினதும் விலைகளை அதிகரித்து எமது சுதந்திரத்தை இல்லாமல் செய்துள்ளனர். இதனைபற்றி பேசும் போதும் பேசாமல் இருந்தாலும் ஒன் லைன் சட்டம், பயங்கரவாத சட்டம் என பல்வேறு சட்டங்களை கொண்டுவந்து மக்களின் எதிர்ப்பை கட்டுப்படுத்த முயற்சிக்கின்றனர்.
அது மட்டுமன்றி பிரபல்யமான நபர்களும் தமக்கு மரண அச்சுறுத்தல் உள்ளன. வீதில் மோதவைத்து மரணத்தை ஏற்படுத்துவார்கள் என்று கூறுகின்றனர். உதாரணமாக முன்னால் பிரதி பொலிஸ் மா அதிபர் சாணி அபேசேக்கர சொல்லுகிறார் அவர் முறைப்பாடு செய்த சம்பவத்தில் நீதிமன்றில் சட்டம் அதிபர் சார்பாக ஆஜரான சட்டதரணி கூறுகிறார் ஆம் சாணியை வீதியில் மோதவைத்து சொல்லலாம் என்று
கடந்த காலங்களில் அரசு எதிர்ப்பு நடவடிக்கையின் போது உண்மையான சாட்சியங்களை கொண்டுவந்தவர்.
முன்னால் அமைச்சர் ரொஷானும் தனக்கு மரண அச்சுறுத்தல் உள்ளதாக கூறுகிறார். வெலிகமை பொலிஸாருக்கிடையே ஏற்பட்ட சம்பவத்தில் ஒருவர் மரணமடைந்தார். இவை இன்று மறைக்கப்பட்டுள்ளன.
அரசை தப்பவைத்துக்கொள்ள மீண்டும் 89ம் ஆண்டு கொலைக்கார குழுவவை வீதிக்கு இறக்கியுள்ளார்களா?.
இன்று சுதந்திரத்தை இல்லாமலாக்கிக் கொண்டு செல்கின்றனர். அதற்கு நாம் எதிர்ப்பு அதற்காகவே மக்கள் பேரவை என்ற முறையில் சுதந்திர திணத்தில் வீதியில் இறங்கியுள்ளோம் என்றார்.