இஸ்மதுல் றஹுமான்
நீர்கொழும்பு மாவட்ட பொது வைத்தியசாலையில் இரத்தம் மாற்றும் சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிக்கு பொறுத்தப்பட்டிருந்த ஒக்சிஜன் சிலிண்டர் திடீரென தீ பற்றியதினால் சிகிச்சை பெற்று வந்த நோயாளியும் கடமையிலிருந்த தாதி ஒருவரும் பலத்த தீக் காயங்களுக்கு உள்ளாகி அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
சனிக்கிழமை பகல் நடந்த இச்சம்பவத்தில் நாத்தண்டிய, இஹல தப்போவயைச் சேர்ந்த ஆர்.ரி.பி. மல்காந்தி எனும் 45 வயது பெண் நோயாளியே எரிகாயங்களுக்கு உள்ளாகியுள்ளார். இவரின் ஒரு காலும் கையும் பலத்த எரிகாயங்களுக்கு உள்ளாகியுள்ளன.
இவருக்கு சிகிச்சை அளித்துக் கொண்டிருந்த ஆண் தாதியான தன்கொட்டுவ, ஹால்தடுவனவைச் சேர்ந்த கீர்த்தி ரன்ஜித் ரனதுங்க என்பவரே எரிகாயத்துக் ஆலாகி சிகிச்சை பெற்றுவரும் தாதியாவர்.
வைத்தியசாலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.