இஸ்மதுல் றஹுமான்
“அவர்களை விரட்டுவோம் சுதந்திரமடைவோம்” எனும் தொனிப்பொருளில் நீர்கொழும்பு மக்கள் பேரவை ஏற்பாடு செய்த எதிர்பு ஆர்ப்பாட்டம் நீர்கொழும்பு தெல்வத்த சந்தியில் நேற்று 4 திகதி காலை இடம் பெற்றது. இங்கு சமூக ஊடக சுதந்திரத்தை பறிக்கும் OSA சட்டத்தை சுருட்டிக்கொள், IMF மகிழ்விக்க மக்களை கொல்லாமல் கொல்லும் அதி மின் கட்டணம் வேண்டாம், அவர்கள் பெற்ற சுதந்திரத்திற்காக நாம் மகிழ வேண்டுமா?, வாயை மூட வேலி அமைக்க கொண்டுவந்த PTA, ATA சட்டங்களை சுருட்டிக்கொள் போன்ற சுலோக அட்டைகளை ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏந்தி நின்றனர்.