ASM JAVID இலங்கையின் 76வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இஸ்லாமிய சமய நிகழ்வுகள் கொழும்பு 11 இரண்டாம் குறுக்கு தெரு அல் ஜாமியுல் அழ்பர் (ரெட் மொஸ்க்) ஜும்ஆ பள்ளி வாசலில் முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் பணிப்பாளர் இஸட்.ஏ.எம்.பைஸலின் வழிநடத்தலில் இன்று (04) காலை 6.00 மணிக்கு இடம் பெற்றது.
வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி ஸப்ரி தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம்.முஸம்மில் மற்றும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சின் அதிகாரிகள் பள்ளிவாசலின் தலைவர் ஏ.ஹாரிஸ் அன்வர் உள்ளிட்ட நிருவாகிகள் உலமாக்கள் என பலர் கலந்து சிறப்பித்தனர்.
இதன் போது தேசியக் கொடியை அமைச்சர் அலி ஸப்ரி ஏற்றி வைத்தார் அதனைத் தொடர்ந்து கொழும்பு ஸாகிராக் கல்லூரி மாணவர்களினால் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து நாட்டுக்காக உயிர் நீத்தவர்களுக்காக இரண்டு நிமிடம் மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து நிகழ்வுகள் பள்ளி வாசலின் இமாமினால் கிராஅத் ஓதப்பட்டதுடன் வரவேற்புரையை முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் இஸ்டம்.ஏ.எம் பைஸல் வழங்கினார். அதனைத் தொடர்ந்து விசேட துஆ பிரார்த்தனையை அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சபையின் செயலாளர் அஷ் ஷெய்க் அர்கம் நூராமித் வழங்கினார் அதனைத் தொடர்ந்து. விசேட உரையை அமைச்சர் அலி ஸப்ரி நிகழ்த்தினார் நன்றி உரையை பள்ளிவாசலின் பொருளாளர் வழங்கினார்.