பிர்தௌசியா அஷ்ரப்
கொழும்பு
கடந்த 2022 ஜனவரி மாதம் முதல் 2023 மே மாதம் வரையிலான 17 மாதங்களில் 119 பிரசவ கால உயிரிழப்புக்கள் இடம்பெற்றுள்ளன.
சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்ட 2023ஆம் ஆண்டுக்கான செயலாற்றுகை அறிக்கையில் இந்த தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
பல்வேறு சம்பவங்கள் தொடர்பான பின்னணியை கண்டறியும் நோக்கில் துறை சார்ந்தும் நிறுவன மட்டத்திலும் மிகக் கவனமாக ஆராயப்பட்டே இந்த தகவல்கள் பெறப்பட்டுள்ளமை அறிக்கையூடாக வெளிப்படுகிறது.
அத்தோடு, தாய் – சேய் இறப்புக்கள் குறித்த கண்காணிப்பு நடவடிக்கைகள், விசாரணைகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில்,
மேல் மற்றும் தென் மாகாணங்களில் இரகசிய விசாரணை முறையொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கையில் இடம்பெறும் பிரசவ கால உயிரிழப்பு வீதத்தை குறைப்பதற்காக நாடெங்கும் உள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும்,
பிரசவ கால மற்றும் பிரசவத்துக்குப் பின்னரான மரணங்கள் தொடர்பில் கண்காணிக்கும் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.