குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்ட முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.
மாளிகாகந்த நீதவான் முன்னிலையில், அவர் 03.02.2024 முற்பகல் பிரசன்னப்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தரமற்ற இம்யூனோகுளோப்ளின் தடுப்பூசி இறக்குமதி செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக 02.02.2024 காலை 9 மணியளவில் அவர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியிருந்தார்.
இதனையடுத்து, சுமார் 10 மணித்தியாலங்களுக்கும் அதிக நேரம் வாக்குமூலம் வழங்கியதன் பின்னர் அவர் கைதுசெய்யப்பட்டார்.