வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இடம்பெயர்ந்த குடும்பங்களை இந்த ஆண்டில் மீள் குடியேற்றுவதற்கான வீடுகளை நிர்மாணிப்பதற்காக 1,500 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த ஒதுக்கீட்டின் படி, 6 இலட்சம் ரூபாய் பெறுமதியான 833 வீடுகளும் 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான 1,000 வீடுகளையும் நிர்மாணிப்பதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளதாக அந்த அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்படி, கடந்த வருடம் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 27,322 வீடுகளும் கிளிநொச்சி மாவட்டத்தில் 28, 619 வீடுகளும் முல்லைத்தீவு மாவட்டத்தில் 29,762 வீடுகளும் வவுனியா மாவட்டத்தில் 23,068 வீடுகளும் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், மன்னார் மாவட்டத்தில் 16, 227 வீடுகளும் திருகோணமலை மாவட்டத்தில் 10,039 வீடுகளும் மட்டக்களப்பு மாவட்டத்தில் 12,098 வீடுகளும் அம்பாறை மாவட்டத்தில் 1,713 வீடுகளும் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.
இதன்படி, மொத்தம் 148,848 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.