கொழும்பிலுள்ள ஜனாதிபதி செயலகத்தில் 01.02.2024 பிற்பகல் இடம்பெற்ற நிகழ்வில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் மற்றும் மூன்று தூதுவர்கள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் நற்சான்றிதழ் கடிதங்களை கையளித்துள்ளனர்.
அவர்களில் ருமேனியா, கிர்கிஸ் குடியரசு மற்றும் துர்க்மெனிஸ்தானுக்கான புதிதாக நியமிக்கப்பட்ட தூதர்களுடன் எஸ்வதினி இராச்சியத்திற்கான புதிய உயர் ஸ்தானிகரும் உள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு (PMD) தெரிவித்துள்ளது.
தமது நற்சான்றிதழ்களை சமர்ப்பித்த இராஜதந்திரிகள் விபரங்கள்,
திரு. மென்சி சிபோ டிலாமினி – கோலாலம்பூரில் உள்ள ஈஸ்வதினி இராச்சியத்தின் உயர் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
திருமதி ஸ்டெலுடா அர்ஹைர் – கொழும்பில் உள்ள ருமேனியாவின் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
திரு. அஸ்கர் பெஷிமோவ் – கிர்கிஸ் குடியரசின் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
திரு. ஷலார் கெல்டினாசரோவ் – புது டெல்லியில் உள்ள துர்க்மெனிஸ்தானின் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிகழ்வில் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க ஆகியோரும் கலந்துகொண்டதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதேவேளை, நியமிக்கப்பட்ட புதிய உயர்ஸ்தானிகர் மற்றும் தூதுவர்கள், தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் மற்றும் ஜனாதிபதியின் தலைமை அதிகாரி சாகல ரத்நாயக்க ஆகியோருடன் சுமூகமான சந்திப்பொன்றில் ஈடுபட்டதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.