கொழும்பு
இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில், இலங்கைக்கு வந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 2 லட்சத்தைத் தாண்டியுள்ளது.
அதன்படி கடந்த ஜனவரி மாதம் 30 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 201,687 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
அவர்களில் பெரும்பாலானோர் இந்தியர்கள் என்றும், மேலும் சுற்றுலா பயணிகள் ரஷ்யா, பிரிட்டன் மற்றும் ஜெர்மனியில் இருந்து வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் 210,000 க்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
இதேவேளை, கடந்த 16 மாதங்களில் 50,000 சுற்றுலாப் பயணிகள் தாமரை கோபுரத்தை பார்வையிட வந்துள்ளதாக தாமரை கோபுர நிர்வாகப் பணிப்பாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்துள்ளார்.
50,000 வது சுற்றுலாப்பயணியாக பல்கேரிய பெண் ஒருவர் நேற்று (31) இந்த கோபுரத்தை பார்வையிட்டதுடன், அவருக்கும் சிறப்பு பரிசு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.