வாழ்க்கைச்செலவு அதிகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தும், வெற் வரியை குறைக்குமாறும் இலவசக்கல்வி வாய்ப்பை மேலும் விரிவுப்படுத்த கோரியும் பேராதனை பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ள ஆர்ப்பாட்ட பேரணியை கலைப்பதற்காக காவல்துறையினர் கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
பேராதனை பல்கலைக்கழக வளாகத்தில் இருந்து ஆரம்பமான குறித்த ஆர்ப்பாட்ட பேரணி மீது, பேராதனை தாவரவியல் பூங்காவிற்கு அருகில் வைத்து இவ்வாறு கண்ணீர்புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.