அண்மையில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மத்தியஸ்திருந்து விளைகின்ற சர்வதேச தீர்த்துவைத்தல் உடன்படிக்கைகளை ஏற்றங்கீகரித்தலும் மற்றும் வலுவுறுத்தலும் சட்டமூலம், நொத்தாரிசு (திருத்த) சட்டமூலம் ஆகிய இரு சட்டமூலங்களில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அவர்கள் 31.01.2024 இல் தனது கையொப்பத்தையிட்டு சான்றுரைப்படுத்தினார்.
இதற்கமைய, இந்தச் சட்டமூலங்கள் 2024 ஆம் ஆண்டின் 5 ஆம் இலக்க மத்தியஸ்திலிருந்து விளைகின்ற சர்வதேச தீர்த்துவைத்தல் உடன்படிக்கைகளை ஏற்றங்கீகரித்தலும் மற்றும் வலுவுறுத்தலும் சட்டம், 2024 ஆம் ஆண்டின் 6 ஆம் இலக்க நொத்தாரிசு (திருத்த) சட்டமாக அமுலுக்கு வருகின்றன.