யாழ்ப்பாணம் – சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கந்தரோடை பகுதியில் நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
அதே பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய நபரே உயிரிழந்தார்.
இறந்தவரின் வீட்டில் வளர்க்கப்பட்ட கோழிகள் சந்தேநபரின் வீட்டுக்குள் நுழைந்ததால் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி கொலைக்கு வழிவகுத்துள்ளமை விசாரணையில் தெரியவந்துள்ளது.
கொலையை செய்த 54 வயதுடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சடலம் தெலிப்பளை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சுன்னாகம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.