பிர்தௌசியா அஷ்ரப்
கொழும்பு
இந்த வருடத்தின் இரண்டாம் காலாண்டில் மக்கள் எதிர்நோக்கும் சிரமங்கள் படிப்படியாக குறையும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
அநுராதபுரத்தில் வைத்து ஊடங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அடுத்த சில மாதங்களில் நாட்டின் பொருளாதாரம் ஸ்திரத்தன்மையை நோக்கி நகரும்.
இதன்போது, பொருளாதார ரீதியில் பின்தங்கியுள்ள வறிய மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ள முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.