ஐ. ஏ. காதிர் கான்
வங்குதோத்து நிலையில் இருந்து மீண்ட நாடாக இலங்கையை அடுத்த பெப்ரவரி மாதம் IMF அறிவிக்கும் என, ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ராஜித்த சேனாரத்ன குறிப்பிட்டார்.
ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து ராஜித்த சேனாரத்ன அரசாங்கத்தில் இணைந்துகொள்ளவுள்ளதாகத் தெரிவிக்கப்படும் நிலையிலேயே, மேற்கண்டவாறு ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ராஜித்த சேனாரத்ன, ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின்போது தெரிவித்தார்.