பிர்தௌசியா அஷ்ரப்
கொழும்பு
நாட்டில் பெரும்பாலான பகுதிகளில் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் மக்கள் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அந்தவகையில் பொத்துவில் பிரதேசத்தில் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் மக்கள் அவதானமாக இருக்குமாறும் அதற்கான சிகிச்சையை பெற்றுக்கொள்ளுமாறும் பொத்துவில் சுகாதார வைத்தியதிகாரி ஏ.யூ.அப்துல் ஸமட் அறிவித்துள்ளார்.
விவசாய செய்கையில் ஈடுபடும் விவசாயிகள் மற்றும் உப உணவுப் பயிர்ச் செய்கையில் ஈடுபடுபவர்களுக்கு இந்த நோய் அதிகமாக பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எலிக்காய்ச்சலினால் அடையாளம் காணப்பட்டுள்ளவர்களுக்கு மாத்திரைகள் வழங்கப்பட்டு வருவதோடு, விழிப்புணர்வு வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், கொதித்தாறிய நீரை பருகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
காய்ச்சல், தசைகளில் கடமையான வலி, கண் விழி சிவப்பு நிறம் அடைதல், சிறுநீர் வெளியேற்றம் குறைவடைதல், சிறுநீருடன் இரத்தம் வெளியேறுதல் இந்நோயின் அறிகுறிகளாகும்.