76 வது சுதந்திர தின நிகழ்வுகளுக்கான ஒத்திகை காரணமாக 30.01.2024 முதல் 04.02.2024ஆம் திகதி வரை கொழும்பு கோட்டை மற்றும் காலி முகத்திடலை அண்மித்த வீதிகளில் விசேட போக்குவரத்து திட்டம் அமுலாகின்றது.
இதன்படி குறித்த தினங்களில் காலை 6 மணி முதல் நண்பகல் 12 மணி வரையும், பெப்ரவரி 3 ஆம் திகதி பிற்பகல் 2 மணி முதல் 4 ஆம் திகதி சுதந்திர தின நிகழ்வு நிறைவடையும் வரை இந்த போக்குவரத்து திட்டம் அமுலாகும் என காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதன்படி, காலி வீதி ஊடாக கோட்டை மற்றும் புறக்கோட்டை பகுதிக்கு பிரவேசிக்கும் பேருந்து மற்றும் இலகுரக வாகனங்கள் பம்பலப்பிட்டி சந்தியில் தெற்கு பக்கம் திரும்பி பௌத்தாலோக்க மாவத்தை, தும்முல்ல சந்தி, தேர்ஸ்டன் வீதி ஊடாக கோட்டை, புறக்கோட்டையை சென்றடைய முடியும்.
புறக்கோட்டையில் இருந்து வெளியேறும் வாகனங்கள் ஓல்கொட் மாவத்தை, தொழில்நுட்ப கல்லூரி சுற்றுவட்டம், சங்கராஜ மாவத்தை, பஞ்சிகாவத்தை வீதி, மருதானை பாலச் சந்தி, காமினி சுற்றுவட்டம் பாதையை பயன்படுத்த முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பேருந்துகளை தவிர்ந்த ஏனைய கனரக வாகனங்கள் வெள்ளவத்தை, W A சில்வா மாவத்தையில் தெற்கு பக்கமாக திரும்பி பழைய ஹெவ்லொக் வீதி, மாயா சுற்றுவட்டம் ஊடாக கோட்டை புறக்கோட்டை பகுதியை சென்றடைய முடியும் என காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.