ஐ. ஏ. காதிர் கான்
தெஹிவளை – “அல் ஜாமிஅதுல் கௌஸிய்யா” அரபுக் கல்லூரியின் ஏற்பாட்டில் மாதாந்தம் நடாத்தப்பட்டு வரும் “கஸீதத்துல் புர்தா” மஜ்லிஸின் இவ்வருடத்துக்கான ஆரம்ப மஜ்லிஸ், வழமைபோல் கல்லூரியின் மஜ்லிஸ் மண்டபத்தில் (27) வியாழக்கிழமை மாலை மஃரிப் தொழுகையைத் தொடர்ந்து நடைபெற்றது.
சங்கையான இம்மஜ்லிஸ் நிகழ்வில், பிரபல தொழில் அதிபர்களான அஸ்ஸெய்யித் ஹனீப் மௌலானா, ராயிஸ் மீரா ஹாஜியார் மற்றும் கல்லூரி நிர்வாகிகள், உஸ்தாது மார்கள், மாணவர்கள், கல்லூரியின் பழைய மாணவர்கள், தங்கள் வாப்பாவின் முரீதீன்கள் முஹிப்பீன்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தனர்.
இறுதியில், கல்லூரியின் பழைய மாணவர்களினால், இக்கல்லூரிக்கு எதிர்காலத்தில் மேற்கொள்ள வேண்டிய பல்வேறு நடவடிக்கைத் திட்டங்கள் மற்றும் நலன்புரி சேவைகள் தொடர்பிலான விஷேட ஒன்றுகூடல் நிகழ்வொன்றும் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.