ஐ. ஏ. காதிர் கான்
சம்பள முரண்பாடு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை அடிப்படையாகக் கொண்டு, 17 தொழிற்சங்கங்கள் இணைந்து இன்று (29) தொழிற்சங்க நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர்.
இதன்படி, பொதுச் சேவை பொறியியலாளர்கள் சங்கம், ஆயுர்வேத வைத்திய அதிகாரிகள் சங்கம், கால்நடைகள் வைத்திய அதிகாரிகள் சங்கம், கட்டிடக் கலைஞர்கள் சங்கம், கணக்கியல் சேவைகள் சங்கம் உள்ளிட்ட 17 தொழிற்சங்கங்கள் இதில் இணைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.