இஸ்மதுல் றஹுமான்
“உறுதியான பொருளாதாரம் – வெற்றிகரமான பயணம்” எனும் தொனிப்பொருளில் புதிய கூட்டணியின் அங்குரார்ப்பண பொதுக்கூட்டம் (27) ஜாஎல நகரில் பெருந்திரளான மக்களின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்றது.
கூட்டணியின் செயற்பாட்டுத் தலைவர் அநுர பிரியதர்ஷன யாபா, புதிய கூட்டணியின் ஸ்தாபகர் நிமல் லான்சா, அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, புதிய கூட்டணியின் கம்பஹா மாவட்டத் தலைவர் அமைச்சர் நளின் பெர்னாண்டோ, ஜே.வி.பி.யின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிபால அமரசிங்க, நீர்கொழும்பு முன்னாள் மேயர் தயான் லான்சா, சுகீஸ்வர ஸ்ரீ பண்டார, அசங்க ஸ்ரீ நாத் உள்ளிட்ட மாகாண சபை, உள்ளூராட்சி சபை பிரதிநிதிகள் உட்பட பெருந்தொகையான ஆதரவாளர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.