பிர்தௌசியா அஷ்ரப்
கொழும்பு
அட்டுளுகம குருந்துவத்த Unique Trading Company இன் அனுசரணையில் 2024 அல்கஸ்ஸாலி தரம் 1ல் கற்கவுள்ள மாணவர்களுக்கு இலவச School Bag மற்றும் தண்ணீர் போத்தல் வழங்கும் நிகழ்வும், அந்த பிள்ளைகளின் பெற்றார்களுக்கு ஆலோசனை வழிகாட்டல் நிகழ்வும் இன்று அல்கஸ்ஸாலி கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
ஆரம்ப வித்தியாலய அதிபர் அஷ்-ஷெய்க் ஜொலீபர் (நளீமி) அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்த வைபவத்திற்கு Unique Trading Company உரிமையாளர்களாக அல்ஹாஜ் இம்தியாஸ் (அட்டுளுகம), ஜனாப் முஹம்மத் பாய்ஸ் (கொரகான) ஆகியோர்களோடு ஆசிச் செய்தியை வழங்க மௌலவி முபாரக் (ஜிப்ரி), பெற்றார்களுக்கான வழிகாட்டல் நிகழ்சிக்கு விசேட பேச்சாளராக களுத்துறை கல்வி வலய விஞ்ஞான பாட ஆசிரிய ஆலோசகர் எம்.என். முஹம்மத் ஆசிரியர், மாணவர்களுக்கு பரிசில்களை கையளிக்க அட்டுளுகம பெரிய பள்ளிவாசல் தலைவர் அனூஸ் ஹாஜியார் மற்றும் அட்டுளுகம காதிரியதுன் நபவிய்யா தக்கியாவின் நிர்வாகத் தலைவர் அல்ஹாஜ் அப்துல் காதர் உள்ளிட்ட இன்னும் பல ஊரின் முக்கியஸ்தர்கள் வருகை தந்திருந்தனர்.