இஸ்மதுல் றஹுமான்
புதிய கூட்டணியின் முதலாவது பகிரங்க பொதுக் கூட்டம் “பலமான பொருளாதாரம் வெற்றிகரமான பயணம்” எனும் தொனிப்பொருளில்
27ம் திகதி சனிக்கிழமை மாலை 3.00 மணிக்கு ஜா-எல நகரில் நடைபெறவுள்ளது.
புதிய கூட்டணியின் கம்பஹா மாவட்ட அமைப்பாளர் வர்த்தக, வாணிப உணவு பாதுகாப்பு அமைச்சர் நளின் பிரனாந்துவின் ஏற்பாட்டில் கல்வி அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த, பாராளுமன்ற உறுப்பினர்களான அநுர பியதர்ஷன யாப்பா, நிமல் லான்ஸா ஆகியோரின் தலைமையில் இப்பொதுக் கூட்டம் நடைபெறும்.
“புதிய கூட்டணி” என்ற பெயரில் இக் கூட்டணி தற்போது செயல்படுகின்றது.
இது தொடர்பாக கருத்துத் தெரிவித்த அமைச்சர் நளின் பிரனாந்து எமக்குள்ள
ஜா-எல மக்களின் ஆதரவை காண்பிப்பதற்கே இங்கு கூட்டத்தை நடாத்துகிறோம். தேசிய மக்கள் சக்தி (ஜேவிபி) அவர்களது கூட்டத்தை நடாத்திய அதே இடத்தில் எமது பொது கூட்டத்தை நடாத்துவதும் எமது மக்கள் பலத்தை நிறூபிப்பதற்கே என்றார்.