அதிவேக நெடுஞ்சாலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கடவத மற்றும் கெரவலப்பிட்டிக்கு இடையிலான அதிவேக நெடுஞ்சாலையில் லொறியின் பின்பகுதியில் வேன் ஒன்று மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் வெளிநாட்டவர் ஒருவர் உயிரிழந்ததுடன் காயமடைந்தவர்கள் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.