பிர்தௌசியா அஷ்ரப்
கொழும்பு
சீனாவின் ஜியாங்சி மாகாணத்தில் உள்ள சின்யு நகரில் கடை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 39 பேர் உயிரிழந்தனர்.
இந்த விபத்தில் மேலும் 9 பேர் காயமடைந்துள்ளனர்.
கடை அமைந்துள்ள கட்டிடத்தின் அடித்தளத்தில் இருந்து தீ பரவியதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தையடுத்து, தீயை அணைத்து மீட்புப் பணிகளில் நிவாரணப் பிரிவினர் அங்கு விரைந்தனர்.
தீ அணைக்கப்பட்டுவிட்டதாகவும், கட்டிடத்திற்குள் வேறு யாரும் சிக்கவில்லை என்றும் உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
சீனாவில் இதுபோன்ற பல தீ விபத்துகள் சமீபத்தில் பதிவாகியுள்ளன.
பாடசாலை விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 13 மாணவர்கள் உயிரிழந்த 24 மணி நேரத்திற்குள் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.
இதனால், அது தொடர்பான தீ விபத்து எப்படி ஏற்பட்டது என்பது குறித்து விசாரணை நடத்த ஜனாதிபதி ஜி ஜின்பிங் உத்தரவிட்டுள்ளார்.