பிரபல தென்னிந்திய இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜா மற்றும் அவர் தலைமையிலான தென்னிந்திய திரையுலகின் பிரபல பாடகர்கள் அடங்கிய குழுவினர் 24.01.2024 மாலை இலங்கையை வந்தடைந்தனர்.
இந்நிலையில், இளையராஜா உள்ளிட்ட குழுவினருக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதேவேளை விமான நிலையத்தில் ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த இசைஞானி இளையராஜா, தான் இசையமைத்த பாடலைக் கேட்காத தமிழர்கள் இலங்கையிலும் உலகிலும் இல்லை என்று தெரிவித்தார்.
25.01.2024 கொழும்பில் இடம்பெறவுள்ள இசை நிகழ்வொன்றில் பங்குபற்றுவதற்காகவே இளையராஜா தலைமையிலான குழுவினர் இலங்கைக்கு வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.