அண்மையில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தேசிய ஒற்றுமைக்கும் நல்லிணக்கத்துக்குமான அலுவலகம் சட்டமூலம், மத்தியஸ்த சபை (திருத்தச்) சட்டமூலம், அற்றோணித் தத்துவம் (திருத்தச்) சட்டமூலம் மற்றும் மோசடிகளைத் தடுத்தல் (திருத்தச்) சட்டமூலம் என்பவற்றில் 23.01.2024 ஆம் திகதி தனது கையொப்பத்தையிட்டு சான்றுரைப்படுத்தியதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன 24.01.2024 ஆம் திகதி பாராளுமன்றத்தில் அறிவித்தார்.
இதற்கமைய, இந்தச் சட்டமூலங்கள் 2024 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க தேசிய ஒற்றுமைக்கும் நல்லிணக்கத்துக்குமான அலுவலகம் சட்டம், 2024 ஆம் ஆண்டின் 02 ஆம் இலக்க மத்தியஸ்த சபை (திருத்தச்) சட்டம், 2024 ஆம் ஆண்டின் 03 ஆம் இலக்க அற்றோணித் தத்துவம் (திருத்தச்) சட்டம் மற்றும் 2024 ஆம் ஆண்டின் 04 ஆம் இலக்க மோசடிகளைத் தடுத்தல் (திருத்தச்) சட்டமாக 23.01.2024 முதல் அமுலுக்கு வருகின்றன.