நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் விசேட சோதனை நடவடிக்கையின் கீழ், 24.01.2024 புதன் கிழமை அதிகாலையுடன் நிறைவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் 930 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களில் போதைப்பொருள் குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய 664 பேரும், குற்றப் புலனாய்வு பிரிவினால் அனுப்பப்பட்ட பட்டியலில் உள்ள 266 பேரும் அடங்குவதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
போதைப்பொருள் குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடையவர்களில் 8 பேர் தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் விசாரணை செய்யப்பட்டு வருகின்றனர்.
அத்துடன், கைதானவர்களில் போதைப்பொருட்களுக்கு அடிமையான ஒருவர் புனர்வாழ்வு மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.