பிர்தௌசியா அஷ்ரப்
கொழும்பு
காஸாவில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 25,295ஆக அதிகரித்துள்ளது.
இது குறித்து அப்பகுதி சுகாதாரத் துறை அமைச்சகம் நேற்று(22) வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
காஸாவில் இஸ்ரேல் இராணுவம் நடத்தி வரும் தாக்குதலில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 190 போ் உயிரிழந்ததுடன் 340 போ் காயமடைந்தனா்.
இத்துடன், இப்பகுதியில் இஸ்ரேலியத் தாக்குதலில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 25,295ஆக அதிகரித்துள்ளது.
இஸ்ரேல் குண்டுவீச்சில் இதுவரை சுமாா் 63,000 போ் காயமடைந்துள்ளனா் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.