24.01.2024 ஆரம்பிக்க திட்டமிடப்பட்டிருந்த தொடர் பணிப்புறக்கணிப்பை இடைநிறுத்துவதற்கு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுகின்றது.
முன்னர் குறிப்பிட்டது போன்று ஜனவரி மாதம் முதல் DAT கொடுப்பனவை வழங்குவதில்லை என அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் 24.01.2024 காலை 8 மணி முதல் தொடர் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை ஆரம்பிக்க தீர்மானித்திருந்தனர்.
இதேவேளை, ஜனவரி மாதத்திற்கான வழமையான சம்பளப் பட்டியலின் ஊடாக DAT கொடுப்பனவைப் பெறாத வைத்தியர்களுக்கு விசேட வவுச்சர் மூலம் உரிய கொடுப்பனவை செலுத்துமாறு நிறுவனங்களின் தலைவர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனை அடுத்து 24.01.2024 ஆரம்பிக்க திட்டமிடப்பட்டிருந்த தொடர் பணிப்புறக்கணிப்பு கைவிடப்படுவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.