கம்பஹா மல்வத்து ஹிரிபிட்டிய பகுதியிள்ள விகாரையொன்றில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் 44 வயதுடைய தேரர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கம்பஹா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி குறித்த தேரர் உயிரிழந்துள்ளார்.
T-56 ரக துப்பாக்கியினால் இந்த சூடு நடத்தப்பட்டுள்ளதுடன், 04 சந்தேக நபர்கள் தப்பி சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கம்பஹா காவல்துறையினர் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.