பிர்தௌசியா அஷ்ரப்
கொழும்பு
மரக்கறி விலைகளை கட்டுப்படுத்த முடியாவிட்டால் வெளிநாடுகளில் இருந்து மரக்கறிகளை இறக்குமதி செய்ய தயார் என வர்த்தக மற்றும் நுகர்வோர் விவகார அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஜனாதிபதியின் செயலாளருக்கும் அறிவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, உணவு பாதுகாப்பு கொள்கைக்குழு இது தொடர்பில் பொறுப்பேற்றுள்ளதாக தெரிவித்த அவர், ஒரு மாதத்திற்குள் காய்கறிகளின் விலை குறைக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் மரக்கறிகளை இறக்குமதி செய்தால் தற்போதைய சந்தை விலையை விட குறைந்த விலையில் வழங்க முடியும் என கூறியுள்ளார்.
இதேவேளை, கடந்த சில வாரங்களாக வரலாறு காணாத வகையில் உயர்ந்திருந்த மரக்கறிகளின் விலைகள் நுவரெலியா மத்திய பொருளாதார நிலையத்தில் சடுதியாக குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.