யாழ்ப்பாணம் – அல்லைப்பிட்டி பகுதியில் 23.01.2024 காலை இடம்பெற்ற வாகன விபத்தில் 5 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்றும், தனியார் பேருந்து ஒன்றும் மோதியதில் குறித்த விபத்து ஏற்பட்டுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
விபத்தில் காயமடைந்தவர்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.