கொழும்பு
பராமரிப்பு நிறுவனங்களில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு ஜனவரி மாதம் முதல் 2000 ரூபாய் மாதாந்த கொடுப்பனவை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
மாவட்ட செயலாளர்கள் ஊடாக இக்கொடுப்பனவை தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
இதுவரையில் பயனடைந்த 16,146 பேருக்கு, அதாவது பிரிவேனா, சிறுவர் இல்லங்கள், முதியோர் இல்லங்கள், பராமரிப்பு இல்லங்களில் உள்ள மாற்றுத்திறனாளிகள் என 16,146 பேருக்கு இந்தப் பணம் வழங்கப்படவுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.