கொழும்பு
கொழும்பில் இருந்து பதுளை நோக்கி சென்ற ரயிலிலிருந்து தவறி வீழ்ந்த வெளிநாட்டவர் ஒருவர் காயமடைந்துள்ளார்.
ஒஹிய ரயில் நிலையத்தில் இந்த அனர்த்தம் இன்று பிற்பகல் நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
காயமடைந்தவர் ஈரான் நாட்டைச் சேர்ந்த 29 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
அவர், சிகிச்சைகளுக்காக தியத்தலாவை வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது .