ஐ. ஏ. காதிர் கான்
“வற்” இல்லா நுகர்வோர் பொருட்களை விற்பனை செய்வதற்காக, நாடு முழுவதும் “VAT FREE SHOP” என்ற தொடர் கடைகளை ஆரம்பிப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக, அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
கடுவெல பிரதேசத்தில் இன்று (21) இடம்பெற்ற நிகழ்ச்சித் தொடரில் கலந்து கொண்டபோதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
தமது அமைச்சின் கீழ் இயங்கும் வீதி அபிவிருத்தி அதிகார சபைக்குச் சொந்தமான பராமரிக்கக்கூடிய பல வர்த்தக நிலையங்கள் உள்ளதால், அதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு, அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அதன்படி, போட்டி மற்றும் நியாயமான வர்த்தகத்தில் ஈடுபடத் தயாராக இருக்கும் மக்களுக்காக காய்கறிகள், அரிசி, குழந்தைகளுக்கான பால்மா போன்ற “வற்” அல்லாத பொருட்களுக்கான கடைகளின் வலையமைப்பை, நாடு முழுவதும் நிறுவ நடவடிக்கைகளை எடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.