பிர்தௌசியா அஷ்ரப்
கொழும்பு
பொருளாதார நெருக்கடி காரணமாக நாட்டில் வேலையின்மை விகிதம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.நிதியமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2023 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் வேலையின்மை விகிதம் 5.2% ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டின் முதல் காலாண்டில், இலங்கையில் வேலையின்மை விகிதம் 4.7% ஆக காணப்படட் நிலையில் இரண்டாவது காலாண்டில், 5.2% ஆக அதிகரித்துள்ளது.
கடந்த ஆண்டில் மாத்திரம் 15-24 வயதுடைய இளைஞர்களில் 25.8 சதவீதமானோர் வேலையை இழந்துள்ளதாகவும் குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.