மலையக வரலாற்றில் முதன்முறையாக மிகவும் பிரமாண்டமான முறையில் தேசிய தைப்பொங்கல் விழா மலையக மண்ணில் இம்முறை இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமானின் ஏற்பாட்டில் கொண்டாடப்படுகிறது.
ஹட்டன் டன்பார்க் மைதானத்தில் 21.01.2024 ஞாயிற்றுக்கிழமை விழா இடம்பெற்று வருகின்றது.
இந்நிகழ்வில் அமைச்சர் ஜீவன் தொண்டமான், கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், அமைச்சர் விதுர விக்ரமநாயக்க, நாடாளுமன்ற உறுப்பினர் ராமேஸ்வர் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டுள்ளதுடன், பெருமளவான பொதுமக்களும் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த தேசிய தைப்பொங்கல் விழா, 1008 பொங்கல் பானை வைக்கப்பட்டு, தமிழர்களின் கலை, கலாசார, பண்பாட்டு விழுமியங்களுடன் வெகு விமர்சையாக இடம்பெற்றுவருகின்றது. அத்துடன், கோலப்போட்டி, தமிழர்களின் வீர விளையாட்டுகளில் ஒன்றான சிலம்பாட்டம் உட்பட பாரம்பரிய போட்டிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.