ஜெயிலர் திரைப்படம் கடந்த ஆண்டு வெளிவந்து இண்டஸ்ட்ரி ஹிட் ஆனது. ரஜினியின் திரை வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றியை லாபத்துடன் தேடி கொடுத்தது என்று கூட சொல்லலாம். உலகளவில் ரூ. 635 கோடிக்கும் மேல் வசூல் செய்த நிலையில், சன் பிச்சர்ஸ் நிறுவனத்திற்கு ரூ. 200 கோடி வரை லாபம் கிடைத்திருக்கும் என்கின்றனர்.
மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற இப்படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கியிருந்தார். இப்படம் அவருக்கு மாஸ் கம் பேக் படமாக அமைந்தது. கண்டிப்பாக ஜெயிலர் 2 வரும் என ஏற்கனவே தகவல் கூறப்பட்ட நிலையில், தற்போது அதற்கான மாஸ் அப்டேட் வெளியாகியுள்ளது.
அதன்படி, ஜெயிலர் 2 உருவாகுவது உறுதி என்றும், அதற்கான ஸ்கிரிப்ட் ஒர்க் கூட நெல்சன் துவங்கிவிட்டார் என்றும் தகவல் தெரிவிக்கின்றனர். இந்த தகவல் ரஜினிகாந்த் ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.