பாடசாலை மாணவர்களுக்கு போதைப்பொருள் அச்சுறுத்தல் தொடர்பில் தெளிவுபடுத்தும் வேலைத்திட்டம் பெப்ரவரி மாதம் 5ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பதில் பொலிஸ்மா அதிபர் தேஷபந்து தேன்கோன் தெரிவித்துள்ளார்.
குறித்த போதைப்பொருள் தடுப்பு வேலைத்திட்டத்திற்காக தேசிய இளைஞர் சேவை மன்ற பயிலுனர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் என தெரிவு செய்யப்பட்ட 200 வளவாளர்களுக்கு பயிற்சியளிக்கும் நிகழ்வில் 20.01.2024 சனிக்கிழமை கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.