இந்திய பெருங்கடலின் தென்மேற்கு பகுதியில் 21.01.2024 அதிகாலை 3.39 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கமொன்று பதிவாகியுள்ளது.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவாகியுள்ளதாக இந்திய தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சுமார் 10 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அந்த மையம் தெரிவித்துள்ளது.