ஐ. ஏ. காதிர் கான்
“வற்” வரி காரணமாக, யோகட் மற்றும் பால் பக்கட்டுக்களின் விலைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக, தேசிய நுகர்வோர் முன்னணியின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.
இதனால், இதுவரை 70 ரூபாவுக்கு விற்கப்பட்ட யோகட், 10 ரூபா அதிகரிக்கப்பட்டு தற்போது 80 ரூபாவாக உயர்ந்துள்ளது.
அத்துடன், பால் பக்கட் ஒன்றின் விலை 40 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், அதன் புதிய விலை 200 ரூபாவாக உயர்ந்துள்ளதாகவும், அசேல சம்பத் மேலும் குறிப்பிட்டுள்ளார்.