அமெரிக்காவைச் சேர்ந்த ஆஸ்ட்ரோபோடிக்ஸ் என்ற தனியார் நிறுவனம் நிலவு குறித்த ஆய்வுக்காக கடந்த 8ம் திகதி விண்கலம் ஒன்றினை ஏவியிருந்த நிலையில் தற்போது அவ் விண்கலம் பசிபிக் பகுதியில் தீப்பற்றுதலுக்குள்ளான நிலையில், அத் திட்டம் தோல்வியடைந்துள்ளது.
இதனால் பெரெக்ரைன் லேண்டர் (Peregrine) விண்கலம் நிலவில் முறையாகத் தரையிறங்க முடியாது என்ற நிலை ஏற்பட்டது.
இந்த நிலையில் ஆஸ்ட்ரோபொடிக்ஸ் (Astrobotic’s) நிறுவனம் தமது எக்ஸ் கணக்கில் விண்கலம் பூமியை நோக்கி வருவதாக குறிப்பிட்டிருந்தது.
குறித்த விண்கலத்தால் பூமியில் தரையிறங்க முடியாது என்பதால் அது தீப்பற்றுதலுக்குள்ளாகும் எனவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.