உகண்டாவுக்கான உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் 19 ஆவது அணிசேரா நாடுகளின் அரச தலைவர்களுக்கான மாநாட்டில் 19.01.2024 வெள்ளிக்கிழமை பங்கேற்கவுள்ளார்.
இம் மாநாடு உலகளாவிய கூட்டு செழுமைக்கான ஒத்துழைப்புக்களை விரிவுபடுத்தல் என்ற தலைப்பில் 19.01.2024 மற்றும் 20.01.2024 ஆகிய தினங்களில் உகண்டாவில் இடம்பெறவுள்ளது.
உகண்டா குடியரசு ஜனாதிபதி யொவேரி முசேவெனியின் (Yoweri Museveni) அழைப்பின் பேரிலேயே ஜனாதிபதி இந்த விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.
அதனையடுத்து, பு77 மற்றும் சீனாவின் 3 ஆவது தென் மாநாடு எதிர்வரும் 21ஆம் மற்றும் 22ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.
குறித்த இரு மாநாடுகளிலும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உரையாற்றவுள்ளதுடன், ஆபிரிக்க வலயத்தின் உலக தெற்கு நாடுகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளையும் சந்திக்கவுள்ளார்.