2024 ஆம் ஆண்டு ஹஜ் கடமையை மேற்கொள்வதற்காக பதிவு செய்து முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்களிடமிருந்து குறிப்பு இலக்கத்தை குறுஞ்செய்தி ஊடாக பெற்றவர்கள், மீளப்பெற முடியாத வைப்புத்தொகையான ரூபா 25,000/- எந்த தாமதமும் இன்றி கூடிய விரைவில் வைப்பிலிடுவதன் மூலம் வரவிருக்கும் ஹஜ் 2024 இல் செயற்படுவதற்கான தங்களது இடங்களை உறுதிப்படுத்தி கொள்ளவும் என அகில இலங்கை ஹஜ் சுற்றுலா நடத்துநர்கள் சங்கம் கோரியுள்ளது.
ஹஜ் தொடர்பான அனைத்து விடயங்களையும் பங்குனி மாதம் 2024 இறுதிக்குள் முடிவுறுத்துமாறும் மேலும் ஹஜ் விசாக்கள் பங்குனி மாதம் தொடக்கத்திலிருந்து வழங்கப்படும் எனவும் மற்றும் ஹஜ் விசா வழங்குவதற்கான இறுதி நாள் ஏப்ரல் மாதம் 28 ஆம் திகதி எனவும் சவூதி அரேபியா முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்திற்கு தெரிவித்துள்ளதாகவும் ஜனவரி 18, வியாழக்கிழமை கொழும்பு டைம்ஸிடம் அகில இலங்கை ஹஜ் சுற்றுலா நடத்துநர்கள் சங்கம் தலைவர் ரிஸ்மி ரெயால் தெரிவித்தார்.
இதனிடையே ரெயால் தெரிவிக்கையில் : ” பல யாத்ரீகர்கள் புதிய பதிவைப் பெற காத்திருக்கிறார்கள், இந்த முக்கியமான பணியில் பொது மக்களின் ஒத்துழைப்பிற்கு பாராட்டுக்களை தெரிவிக்கின்றேன்.”
உரிய நேரத்தில் மீளப்பெற முடியாத வைப்புத்தொகையினை செலுத்த தவறினால், உங்கள் பதிவு மீண்டும் பட்டியலிடப்படும்.