‘அஸ்வெசும’ நலன்புரி கொடுப்பனவுகளை பெறும் குடும்பங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
‘அஸ்வெசும’ நலன்புரி கொடுப்பனவு குறித்த மேன்முறையீடுகளை பரிசீலித்ததையடுத்து, மேலதிகமாக 300,000 குடும்பங்களை இணைத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, ‘அஸ்வெசும’ நலன்புரி கொடுப்பனவுகளை பெறும் குடும்பங்களின் எண்ணிக்கை 17 இலட்சமாக அதிகரித்துள்ளதாக பதில் நிதியமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.