- புள்ளி விபரவியல் திணைக்களம் அதிர்ச்சித் தகவல்
2023 நவம்பர் மாதத்துடன் தொடர்புடைய மாதாந்திர வறுமைக் கோடு அட்டவணையை, மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளி விபரவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
இந்த நாட்டில் ஒருவர் தனது குறைந்தபட்ச அடிப்படைத் தேவைகளை ஒரு மாதத்தில் பூர்த்தி செய்யத் தேவைப்படும் செலவு ரூபா 16,302 என, அந்த அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
தேசிய அளவில் காட்டப்பட்ட இந்த எண்ணிக்கை ரூபா 16,112 பதிவாகியிருந்தது.
இந்த அறிக்கையில் கொடுக்கப்பட்டுள்ள மாவட்ட பெறுமதிகளின்படி, கொழும்பு மாவட்டத்தில் வசிக்கும் ஒருவர், ஒரு மாதத்தில் தமது குறைந்தபட்ச அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய, அதிகளவு செலவு செய்ய வேண்டியுள்ளது. இது ரூபா 17,582 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது.
மொனராகலை மாவட்டத்தில் வசிக்கும் ஒருவருக்கு குறைந்தபட்ச தேவைகளைப் பூர்த்தி செய்ய ரூபா 15,587 செலவாக வேண்டும்.
மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளி விபரவியல் திணைக்களத்தின் இந்தக் குறிப்பில், “இலங்கையின் 25 மாவட்டங்களில் ஒன்றாக, குறைந்தபட்ச செலவை ஏற்க வேண்டிய மாவட்டமாக, மொனராகலை மாவட்டம் பதிவு செய்யப்பட்டுள்ளது” எனப் பதிவிடப்பட்டுள்ளது.